அதர்வா - மணிகண்டன் இணைந்து நடித்துள்ள ‘மத்தகம்’... டீசர் வெளியீடு !

Mathagam

 அதர்வா மற்றும் மணிகண்டன் இணைந்து நடித்துள்ள ‘மத்தகம்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகர் அதர்வா முதல் முறையாக நடித்துள்ள வெப் தொடர் ‘மத்தகம்’. இந்த வெப் தொடரில் அதர்வாவுடன் இணைந்து மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை பிரசாத் முருகேசன் என்பவர் இயக்கியுள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.

Mathagam

நடிகை நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி, வடிவுக்கரசி, திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த வெப் தொடருக்கு எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Mathagam

30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து சுவாரஸ்யமாக இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. ஒரு இரவில் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் இந்த படம். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடித்தளத்திற்காக உருவாகியுள்ள இந்த வெப் தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story