ஸ்ரீ தேவி மகளுடன் இணைந்து நடிக்கும் அதர்வா?

ஸ்ரீ தேவி மகளுடன் இணைந்து நடிக்கும் அதர்வா?

புதிய படம் ஒன்றில் ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகளுடன், அதர்வா இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவருக்கென தனி ரசிகைகள் பட்டாளமே உள்ளது. அவரது நடிப்பில் இறுதியாக வெளியான மத்தகம் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநர் ஆகாஷ் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இதில் பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளாராம். இந்தப் படத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஸ்ரீ தேவி மகளுடன் இணைந்து நடிக்கும் அதர்வா?

அதர்வாவின் கேரியரில் இன்றுவரை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இது இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Share this story