அதர்வா நடித்த 'தணல்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...!
1746624514775

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகும் தணல் படத்தின் வெளியீடு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் அதர்வா டிஎன்ஏ, பராசக்தி, தணல் ஆகிய படங்களைக் கைசவம் வைத்திருக்கிறார். இதில், டிஎன்ஏ திரைப்படம் ஜூன் வெளியீடாகத் திரைக்கு வருகிறது. பராசக்தி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.இந்த நிலையில், இவர் நடித்து முடித்த தணல் படம் ஜூலையில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் இன்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தணல் படத்தில் அறிமுக இயக்குநர் ரவிந்திர மாதவா இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்துள்ளார்.
கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன்இசையமைத்திருக்கிறார். அதர்வா பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.