அதுல்யா ரவியின் ரீசன்ட் புகைப்படங்கள் வைரல்
நடிகை அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கோயம்புத்தூரைச் சேர்ந்த அதுல்யா ரவி 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து, ஏமாளி, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்தார். இந்த ஆண்டு வெளியான மீட்டர் என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் அதுல்யா.
இவர் சாந்தனுவுடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற கசமுசா படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, வட்டம், கடாவர் போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது ஹரிஸ் கல்யாணுடன் டீசல் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.