தி ஆர்ச்சிஸ் திரைப்பட விழாவில் அட்லீ - பிரியா தம்பதி

தி ஆர்ச்சிஸ் திரைப்பட விழாவில் அட்லீ -  பிரியா தம்பதி

குஷி கபூர் தற்போது The Archies என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் குஷி கபூர் மட்டுமன்றி ஷாருக்கானின் மகள் சுஹானா கான், அமிதாப் பச்சனின் பேத்தி ஆகியோரும்இப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாகின்றனர்.  இப்படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உச்ச நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சுஹானா, ஷாருக்கான், கஜோல், ஆதித்யா ராய் கபூர் உள்பட பலர் இப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

தி ஆர்ச்சிஸ் திரைப்பட விழாவில் அட்லீ -  பிரியா தம்பதி

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா தம்பதியினரும் கலந்து கொண்டனர். ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் நடைபெறும் அனைத்து விதமான பிரம்மாண்ட நிகழ்ச்சிகளிலும் அட்லி - பிரியா தம்பதி கலந்து கொள்கின்றனர். 

Share this story