‘என் பலம் நீ, பலவீனம் நீ’ ‘என் எல்லாமும் நீ’; அட்லீ-பிரியாவின் திருமண நாள் கொண்டாட்டம்.

photo

ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார் இயக்குநர் அட்லீ .நான்கு படங்கள் இயக்கி நான்கு படங்களிலுமே பிளாக்பஸ்டர் வெற்றியைக் கண்ட இயக்குனரும் இவரே.இதைத் தொடர்ந்து தற்பொழுது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கிவருகிறார், அட்லியில் முதல் இந்தி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

photo

அட்லீ கடந்த 2015-ஆம் ஆண்டு தனது தோழியும் நடிகையுமான பிரியா-வை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதி வெளிநடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு வித விதமான புகைப்படம் எடுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் இன்று அட்லீ- பிரியா தங்களது 8-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

photo

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அட்லீ தனது அம்பு மனைவிக்கு அழகான வரிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில், "இன்று நமது எட்டாம் ஆண்டு திருமண நாள். இந்த எட்டு வருட பயணம் என்னை ஒரு சிறுவனிலிருந்து ஆணாக மாற்றியுள்ளது.ஒன்றுமே இல்லாமல் நம் வாழ்வை நாம் ஆரம்பித்தோம். இன்று நமக்கு கிடைத்திருக்கும் அனைத்திற்கும் காரணம்நான் உன்னிடம் இருந்து கற்றுக் கொண்ட பொறுமையும்;நல்ல குணங்களும் தான்! இன்னும் வாழ்வில் நிறைய தூரங்கள் நாம் சென்று வெல்ல வேண்டி இருக்கிறது. எனக்கு ஒரு அழகான தோழியாகவும்எல்லாமுமாகவும் இருப்பதற்கு நன்றி!" என பதிவிட்டுள்ளார்.

அதே போன்று பிரியாவும் தனது சமுக வலைதள பக்கத்தில் “எட்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து பயணிக்க வேண்டி இருக்கிறது. என் அன்பு கணவனுக்குஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! என் வாழ்வின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஒரு நபராக இருப்பதற்கு நன்றி. என் பலமும், பலவீனமும் நீங்கள் தான்.. எனது எல்லாமும் நீங்கள்தான்என்றென்றும் உங்களை நேசிக்கிறேன்..!"   என காதல் நிறைந்த வரிகளை பதிவிட்டுள்ளார்.

திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Share this story