சினிமா பிரபலங்களின் தந்தையர் தின கொண்டாட்டம் - வெளியான கியூட் கிளிக்ஸ்.
உலகம் முழுவதும் தந்தையர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பலரும் தங்கள் தந்தைக்கு வாழ்த்துகளை பகிர்ந்து புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பிரபல இயக்குநர்களான விக்னேஷ் சிவன் மற்றும் அட்லீ பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டு இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தந்தையான விக்னேஷ் சிவன், அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இரட்டை குழந்தைகளை கைகளில் ஏந்தியவாறு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதனுடன் கேப்ஷனாக ‘வாழ்க்கை என்பது மிகவும் அழகானது, அனைவருக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள், அதிகம் புகழப்படாத உண்மையான ஹீரோக்கள் தந்தையர்கள்’ என பதிவிட்டுள்ளார்.
அதேபோல அட்லீ தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை, பிரியா அட்லீ பகிர்ந்துள்ளார் அதுவும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதனுடன் கேப்ஷனாக "தந்தையர் தின வாழ்த்துகள் டாடா.. மீர், பெக்கி மற்றும் அம்மா உங்களை அதிகம் நேசிக்கின்றோம். நீங்கள் இந்த உலகத்திலே சிறந்த அப்பா" என பதிவிட்டுள்ளார்.