மும்பையில் அலுவலகம் திறந்த அட்லி!...

photo

பிரபல இயக்குநராக வலம் வந்த அட்லி, மும்பையில் தனது அலுவலகத்தை திறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் அட்லி, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதையடுத்து ஆர்யா - நயன்தாரா நடிப்பில் வெளியானராஜா ராணிபடத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அடுத்து விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார்

இப்படி தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட படங்களை கொடுத்து வந்த அட்லி பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கனை வைத்து ஜவான் படத்தை கொடுத்து அங்கும் நல்ல பெயரை எடுத்தார். இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் வீடு வாங்கிய அட்லி தற்போது அங்கு அலுவலகம் ஒன்றை திறந்துல்ளார். அதன் மதிப்பு ரூ.40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலமாக ஷாருக்கானை தொடர்ந்து முன்னணி பாலிவுட் நடிகர்களை அட்லி இயக்க பிளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story