மகன் பெயரை அறிவித்த அட்லீ-பிரியா தம்பதி – என்ன பெயர் தெரியுமா?

photo

நட்சத்திர தம்பதிகளாக வலம்வரும் அட்லீ பிரியா தம்பதியின் குழந்தை பெயரை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு பெயரா என கூறிவருகின்றனர்.

photo

ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி இயக்குநராக மட்டுமல்லாமல், முன்னணி இயக்குநராகவும் வலம்வருகிறார். அட்லீ தனது நீண்ட நாள் காதலியான நடிகை  பிரியாவை  திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவங்கி சில படங்களை தயாரித்துள்ளார். தொடர்ந்து  ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். செம மாஸ்ஸாக தயாராகி வரும் இந்த படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.

photo

இந்த நிலையில் அட்லீ பிரியா தம்பதி கடந்த ஜனவரி மாத இறுதியில் தாங்கள் ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆன தகவலை அறிவித்தனர். தொடர்ந்து தற்போது இந்த தம்பதி குழந்தையின் பெயரை அறிவித்துள்ளனர். அதன்படி குழந்தைக்கு “மீர்” என பெயரிட்டுள்ளனர். அதனுடன் அவர்கள் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

Share this story