நான்கு திரைப்படங்களை தயாரிக்கும் அட்லீ

நான்கு திரைப்படங்களை தயாரிக்கும் அட்லீ

பிரபல இயக்குனர் அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது பாலிவுட்டிலும் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இதன் பிறகு அட்லீ தளபதி விஜய் உடன் 4வது முறை இணைய இருப்பதாக ஏற்கனவே பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்கும் வகையில் புதிய திரைப்படத்திற்கு கதை எழுதுவதாக கூறப்படுகிறது. 

நான்கு திரைப்படங்களை தயாரிக்கும் அட்லீ

இது தவிர, இயக்குநர் அட்லீ தனது 'ஏ ஃபார் ஆப்பிள்'நிறுவனம் மூலம் நான்கு படங்களைத் தயாரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தியில் தெறி திரைப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. அதனை அட்லீ தயாரிக்க உள்ளார்.  இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதையடுத்து தமிழில் 2 படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்து உள்ளார். 
 

Share this story