குழந்தை பிறப்பு குறித்து அறிவித்த அட்லீ – இந்த வருடம் இரட்டை ரிலீஸ் இருக்கு மக்களே!

photo

பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ, தனது முதல் படமான ‘ராஜாராணி’ படத்தின் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் வரிசையில் இணைந்த அவர் தற்பொழுது பாலிவுட் பக்கம் சென்று, அங்கு ஷாருக்கனை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கம் மட்டுமல்லாமல் ‘A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி  தயாரிப்பாளராக சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.

photo

அந்த வகையில் சமீபத்தில் அவர் விரைவில் தந்தையாக போவது குறித்து அறிவித்திருந்தார், தொடர்ந்து அட்லிபிரியாவிற்கு சீமந்தமும் சிறப்பான முறையில் நடந்தது, அந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் கலந்து கொண்டு தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பரிசும் வழங்கினார். அதற்கான புகைப்படங்கள், வீடியோ ஆகியவை வெளியாகி இணையத்தை அதகலம் செய்தன.

photo

அந்த வகையில் தற்போது இயக்குநரான அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து பதிவிவோடு தரமான செய்தியையும் பகிர்ந்துள்ளார். அதாவது 'மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து. இந்த வருடம் இரட்டை ரிலீஸ் இருப்பதாக அறிவித்துள்ளார். ஒன்று அவரது குழந்தை இந்த அண்டு பிப்ரவரி மாதம் பிறக்க இருக்கிறதையும், மற்றொன்று அவரது இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் தயாராகி வரும் ‘ஜவான்’ ஜூன் 2 ரிலீஸ் ஆக உள்ளதையும் அறிவித்துள்ளார்'.


 

Share this story