'அட்லீ-பிரியா' தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு!..... – போட்டோ போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அட்லீ.

photo

இயக்குநர் அட்லீ கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக திகழ்கிறார். தற்போது பாலிவுட் இயக்குநராக உருவெடுத்துள்ள அட்லீ ஷாருக்கானை இயக்கியுள்ளார். இந்த நிலையில் வாழ்விலும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள அட்லீ விரைவில் தந்தையாக இருக்கும் விஷயத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். இந்த நிலையில் அட்லீபிரியா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது, இது குறித்து போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அட்லீ.

photo

கோலிவுட்டின் கியூட் தம்பதியாக வலம் வரும் அட்லீ பிரியா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குட்டி அட்லீ பிறந்துள்ள இந்த இனிய தகவலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்திய அட்லீ கூறியதாவது “ அவர்கள் சொல்வது உண்மைதான் , இது போன்ற ஒரு உணர்வு உலகில் வேறுஇல்லை, எங்களின் ஆண் குழந்தை இங்கே உள்ளது!  பெற்றோராக எங்களின் பயணம் இன்று தொடங்க்கியுள்ளது!” என கூறி அழகிய புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

photo

8ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோர் ஆகியுள்ள அட்லீபிரியா தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.முன்னதாக  பிரியாஅட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தளபதி விஜய் வந்து வாழ்த்தி சென்றது குறிப்பிடத்தக்கது.

Share this story