அட்லீ தயாரிக்கும் புது படம் -ஹீரோ யார் தெரியுமா ?

atlee
பான் இந்தியா இயக்குனர் ஆகிவிட்ட அட்லியை சமீபத்தில் சந்தித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ என மூன்று 100 கோடி வசூல் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு ‘எல்ஐகே’ படம் தோல்வியாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக ஹிட் படம் தர வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.
இதற்காக பல கதைகளை கேட்டு வந்தார். அவரே இயக்கும் பட வேலைகளிலும் ஈடுபட்டார். ஆனால் அந்த படத்துக்கான திரைக்கதை முழுமை அடையவில்லை. இந்நிலையில்தான் அட்லியை சந்தித்துள்ளார். அட்லியின் இணை இயக்குனர் இயக்க உள்ள படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அட்லியே தயாரிக்கிறார்.

Share this story