மேடையில் இந்தியில் பேசிய மனைவி... தமிழில் பேச சொன்ன ஏ.ஆர்.ரகுமான் !

arr

 மேடையில் தனது மனைவி இந்தி பேசியதை மாற்றி தமிழில் பேச இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் செயல் பாராட்டை பெற்று வருகிறது. 

இந்திய சினிமாவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் நாயகனாக இருக்கும் அவரின் இசையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழில் பொன்னியின் செல்வன், லால் சலாம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார்.  அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் AR ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்துகொண்டார்.  விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ARR பேசி கொண்டிருந்தபோது, அவரது மனைவியை மேடைக்கு பேச வரும்படி அழைத்தனர். இதனைதொடர்ந்து, மேடைக்கு வந்த அவர் இந்தியில் பேசினார். அப்போது அவரை இடைமறித்த ARR தமிழில் பேசும்படி செல்லக்கட்டளை இட்டார். அவர் இப்படி கூறியதும் கூட்டத்தில் பலத்த கோஷம் எழுந்தது.

இந்நிலையில் சென்னையில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனது மனைவி சாய்ரா பானுவுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துக்கொண்டார். முதலில் விழாவின் மேடையில் ஏ.ஆர்.ரகுமான் சுவாரஸ்சியமாக பேசினார். 

அப்போது ஏஆர் ரகுமானின் மனைவியை மேடைக்கு பேச வரும்படி அழைத்தனர். இதையடுத்து மேடைக்கு வந்த அவர் இந்தியில் பேச ஆரம்பித்தார். உடனடியான இடைமறித்த ஏஆர் ரகுமான், தமிழில் பேசும்படி அன்புக் கட்டளை இட்டார். இதை கேட்ட ரசிகர்கள் ஏஆர் ரகுமானின் செயலை பார்த்து பலத்த கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர். 

 

Share this story