இது என்ன புது சிக்கல்?.....- ‘அயலான்,’ ஆலம்பனா’ படங்கள் வெளியிட தடை.

photo

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இயக்குநர் ரவிகுமார் ஆகியோர் கூட்டணியில் தயாராகியுள்ள படம் அயலான். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து நடிகர் வைபவ், பார்வதி நாயர் கூட்டணியில் தயாராகியுள்ள படம் ஆலம்பனா. இந்த படம் இன்று வெளியாக இருந்தது. இந்த நிலையில் இவ்விரு படங்களையும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

photo

அதற்கு காரணம், இவ்விரு படங்களையும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த நிறுவனம் டி.எஸ்.ஆர் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 14.70 கோடி ரூபாயை தர வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பணத்தை தரும் வரை படங்களை வெளியிடக்கூடாது என அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.   இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்துள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Share this story