அயலான் வெளியீட்டு தேதி தள்ளிப்போகிறதா?

அயலான் வெளியீட்டு தேதி தள்ளிப்போகிறதா?

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் வௌியீடு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் அயலான்.  இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, இஷா கோபிகர் கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், ஒரு சில காரணங்களால் படம் வெளியாகாமல் தொடர்ந்து தள்ளிப்போனது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணொலி ஒன்றை வெளியிட்டு தீபாவளிக்கு படம் வெளியீடு என படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

Share this story