பட்டையை கிளப்பும் ‘அயலான்’ பட ப்ரீ ரிலீஸ் பிசினஸ் - இத்தனை கோடியா!......

photo

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ள ‘அயலான்’ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை வசூலித்துள்ளது.

photo

சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையத்துள்ளார்.

இந்த நிலையில் அயலான் படம் தமிழகத்தில் பெரிய அளவில் பிசினஸ் செய்துள்ளது. அதாவது 40 கோடி ரூபாய்க்கு படம் விற்பனையாகியுள்ளது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்பை கூட்டியுள்ளது.

Share this story