இதுதான் உங்கள் ஊடக தர்மமா?- குமுதத்தை விளாசிய ‘அயலான்’ பட தயாரிப்பு நிறுவனம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் அயலான். சயின்ஸ் பிக்ஷன் படமாக தயாராகியுள்ள இந்த படம் குறித்து பிரபல பத்திரிக்கை நிறுவனமான குமுதம் தவறான செய்தி வெளியிட்டுள்ளதற்கு, படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரமான பதிலடி கொடுத்துள்ளனர்.
அதாவது குமுதம் வார இதழில் “ சிக்கலில் அயலான் மீள்வாரா சிவகார்த்திகேயன்?” என்ற தலைப்பில் அயலான் படத்துக்கு சிக்கல் என்பது போல பொய்யான செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வார இதழை தொடர்புகொண்டு கேட்ட போது ‘தாங்கள் நீண்டகாலமாக அயலான் திரைப்படத்தின் exclusive செய்திக்காக பின்தொடர்ந்ததாகவும் ஆனால் அவர்கள் தங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் 'ஆனந்த விகடன்' நிறுவனத்திற்கு exclusive செய்திகளை கொடுத்ததால் தான் இந்த வார இதழில் அப்படியான செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டதாகவும் கூறுயுள்ளார்கள்.
சிக்கல் இல்லாத அயலான், மீளுமா ஊடக தர்மம்?
— KJR Studios (@kjr_studios) November 22, 2023
இந்த வாரம் 'குமுதம்' வார இதழ் நிறுவனம் 'அயலான்' திரைப்பட வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு அந்நிறுவனத்தை தொடர்புகொண்டபோது, 'தாங்கள் நீண்டகாலமாக அயலான் திரைப்படத்தின் exclusive… pic.twitter.com/BT5CTpmdGS
இதனால் கொந்தளித்த அயலான் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் “ இதுவா உங்கள் பத்திரிக்கை நிறுவனத்தின் தர்மம்? ஒரு திரைப்படத்தின் முக்கிய செய்தியை எதில் ஊடகப்படுத்த வேண்டும் என்ற சுதந்திரமும், உரிமையும் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடையாதா? இதற்காக அந்த திரைப்படத்தை பற்றி வதந்தி பரப்புவது ஒருவித வன்முறை ஆகாதா? இதுபோன்ற கீழ்மையான செயலை இனிமேலும் எந்த திரைக் கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் செய்யாமல் இருக்குமாறு குமுதம் நிறுவனத்தை கேட்டுக்கொள்கிறோம்.” என குமுதம் நிறுவனத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.