ஹீரோயினாக அறிமுகமாகும் சின்னித்திரை மூலம் பிரபலமான ஆயிசா
1738658100000

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள கணேஷ் சரவணன், ஆயிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவரும் சீரியல் நடிகையுமானவர் ஆயிஷா. இவர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான 'உப்பு புளி காரம் ' வெப் தொடரில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் தற்போது ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். அதன்படி, அஜித்தின் விடாமுயற்சி, இரும்புத்திரை, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன், ஆயிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படம் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனரான ஜாபர் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் சகோதரர் ரமேஷ், நடிகர் புகழ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.