வீர தீர சூரன் படத்தின் 'அய்லா அலேலா' பாடல் நாளை ரிலீஸ்...!

விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தின் 'அய்லா அலேலா' பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
Get ready for some 🔥 excitement! #AylaAllela promo song drops tomorrow - don't miss it! 🤩 @chiyaan's #VeeraDheeraSooran releasing on March 27th! 💥
— HR Pictures (@hr_pictures) March 23, 2025
An #SUArunKumar Picture
A @gvprakash musical
Produced by @hr_pictures @riyashibu_ @iam_SJSuryah #surajvenjaramoodu… pic.twitter.com/HEGHI7Hazp
டிரெய்லர் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது மேலும் படத்தின் கால அவகாசம் 2.30 மணி நேரமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் ப்ரோமோ பாடலான அய்லா அலேலா பாடலின் வீடியோவை நாளை படக்குழு வெளியிட இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.