'அயோத்தி' படத்தின் மாபெரும் வெற்றி... இயக்குனருக்கு தங்க செயின் பரிசளித்த சசிகுமார் !

ayothi

'அயோத்தி' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இயக்குனருக்கு நடிகர் சசிகுமார் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.  

ayothi

மனிதத்தையும், மத நல்லிணக்கம் குறித்தும் பேசியுள்ள திரைப்படம் 'அயோத்தி'. மிக மோசமானவராகவும், மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாதவராகவும் ஒருவரை ஒரு பயணம் எப்படி மாற்றுகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள இந்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

ayothi

இந்த படத்தில் போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ், யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்த இப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை வெற்றியை தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கிலும் இந்த படம் ரீமேக்காக உள்ளது. 

ayothi

இந்நிலையில் இப்படம் 3வது வாரமாக வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல விமர்சனங்களையும், வசூலையும் குவித்து வரும் இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் இன்று கேக் வெட்டிக் கொண்டாடினர். அப்போது இயக்குனர் மந்திரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளருக்கு நடிகர் சசிகுமார் தங்க ஜெயின் ஒன்றை பரிசாக வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்‌.  

Share this story