அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் பறக்கும் விடாமுயற்சி குழு

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் பறக்கும் விடாமுயற்சி குழு

‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மே 1-ஆம் தேதி வெளியானது. அனிரூத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.  கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ப்ரீ பிரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றிருந்தனர். இதனிடையே படக்குழு 5 நாட்கள் இடைவெளியில், சென்னை திரும்பியது.

இந்நிலையில், மீண்டும் படக்குழு அஜர்பைஜான் திரும்ப உள்ளது. அங்கு அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும், ஜனவரி மாதத்திற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. 
 

Share this story