“பாகுபலி எல்லாம் ஒன்னுமே இல்லை”... ‘இந்தியன் 2’-வை பார்த்து அசந்துபோன கமலஹாசன் !

indian 2

‘இந்தியன் 2’ படத்தின் காட்சிகளை பார்த்து அசந்து போன நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கரை பாராட்டியுள்ளார். 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். 

indian 2

இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் ப்ரீயட் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுள்ளது.  

indian 2

சமீபத்தில் இப்படத்தில் தனது பகுதி டப்பிங்கை நடிகர் கமலஹாசன் நிறைவு செய்தார். அப்போது காட்சிகளை பார்த்த அவர் அசந்து போயுள்ளார். ‘பாகுபலி’ திரைப்படமெல்லாம் ஒன்னுமே இல்லை. இனிமேல் ‘இந்தியன் 2’ படத்தை பார்த்தால் ‘பாகுபலி’, ‘கேஜிஎப்’ படங்களை பற்றி பேச மாட்டார்கள் என ஷங்கரிடம் கமல் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Share this story