பேக் டூ பேக் மூன்று முன்னணி நடிகர்களை இயக்கும் 'இயக்குநர் ஹரி’- செம தகவல்.

photo

பிரபல இயக்குநராக இருக்கும் ஹரி, அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போனவர். இவர் அடுத்தடுத்து 3 முன்னணி ஹிரோக்களை வைத்து படங்கள் இயக்க போவதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

photo

பரபரப்புக்கும் ,விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் படங்களை இயக்கி முன்னணி நடிகராக வலம் வருபவர் இயக்குநர் ஹரி. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் அருண்விஜய்யின் ‘யானை’ நல்ல வசூலை ஈட்டித்தந்த இந்த படத்தை தொடர்ந்து, அவர் அடுத்ததாக விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு எற்கனவே வெளியான நிலையில், அந்த படத்தின் ஷுட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாம்.

photo

அடுத்ததாக கார்த்தியை வைத்து இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது ஓகே ஆகிவிட்டால் இரண்டு படங்களையும் பேக் டூ பேக் முடித்துவிட்டு ஹரியின் விருப்பமான நடிகரான சூர்யாவை இயக்க உள்ளாராம். இதற்கு முன்னர் சூர்யா-ஹரி கூட்டில் தயாராக இருந்த ‘அருவா’ திரைப்படம் எதிர்பாராதவிதமாக சில காரணங்களால் தடைப்பட்ட நிலையில்  அடுத்து இந்த கூட்டணி புதிய படத்தில் இணைகின்றனர். இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share this story