'பேட் கேர்ள்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை ரிலீஸ்

bad girl

'பேட் கேர்ள்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

bad girl
படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடல் நேற்று வெளியாக இருந்தது. பாரதிராஜாவின் மகன் மனோஜ் இறந்ததால் பாடலின் வெளியீட்டை இன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

Share this story

News Hub