'பேட் கேர்ள்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை ரிலீஸ்...!
Tue Mar 25 2025 2:21:56 PM

இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்”.
இப்படத்தின் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஸரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் திரிவேதி மேற்கொண்டுள்ளார். இப்படம் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது.
Anurag Kashyap and Vetri Maaran Present #BadGirl First Single from Tomorrow.#PleaseYennaAppadiPaakadhey
— Grass Root Film Co (@GrassRootFilmCo) March 25, 2025
An Amit Trivedi Musical@GrassRootFilmCo #VetriMaaran @anuragkashyap72 @varshabharath03 @ItsAmitTrivedi @kabervasuki #MaalavikaManoj pic.twitter.com/ZcQ9YbsJzd
சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பேட் கேர்ள் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.