‘Bad Girl' படத்தின் இசை நாளை முதல் வெளியாகும் என அறிவிப்பு

ஆ

இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், வெற்றிமாறன் ஆகியோரின் தயாரிப்பில், வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Bad Girl' படத்தின் இசை நாளை முதல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Image

வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  bad girl படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது.

இந்நிலையில் ‘Bad Girl' படத்தின் இசை நாளை முதல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படம் செப்டம்பர்  5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Share this story