டாக்டர் ராஜசேகர் நடிப்பில் வெளிவந்த பைக்கர் பட விமர்சனம்
1775784626000
தனது தந்தை டாக்டர் ராஜசேகரை போல் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்பது சர்வானந்தின் லட்சியம். இதற்காக தந்தையிடம் பயிற்சி பெறுகிறார். இந்திய மோட்டார் சைக்கிள் பந்தயத்தை சர்வானந்த் மூலமாக உலக அரங்கிற்கு எடுத்து செல்ல டாக்டர் ராஜசேகருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, எதிர்பாராவிதமாக அவரை சர்வானந்த் ஏமாற்றுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
மோட்டார் சைக்கிள் பந்தய வீரராகவே மாறி, கடுமையான உழைப்பை வழங்கிய சர்வானந்த் பாராட்டுக்குரியவர். அவரது காதலி மாளவிகா நாயர், பாடலில் கிளாமர் விருந்து படைத்துள்ளார். அவர்களின் மகனாக வரும் சிறுவன் நடிப்பு ஈர்க்கிறது. மகன் மீது பாசம், பந்தயத்தின் மீது ஆர்வம், பேரனின் அன்புக்கு ஏங்கும் மனம் என்று, டாக்டர் ராஜசேகர் சிறப்பாக நடித்துள்ளார். பிரம்மாஜி, துளசி, கார்ப்பரேட் கறார் முதலாளி அதுல் குல்கர்னி ஆகியோருடன் பைக் ரேஸ் வீரர்களும், மற்றவர்களும் இயல்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜெ.யுவ்ராஜ், இசை அமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, எடிட்டர் அனில் குமார் பலாசா ஆகியோர், படத்தை தாங்கும் தூண்கள். மோட்டார் சைக்கிள் பந்தயத்துடன் தந்தை, மகன் பாசத்தை கலந்து, கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ள இயக்குனர் அபிலாஷ் ரெட்டி, எம்.வி.எஸ்.பரத்வாஜ் மற்றும் ஷ்ரவன் மடலாவின் திரைக்கதைக்கு தனது இயக்கத்தின் மூலமாக உயிரூட்டியுள்ளார். பைக்கர்களின் ஆபத்து நிறைந்த சாகச பயணத்தை அட்டகாசமாக சொல்லி இருக்கிறார்கள்