ஒரு வார்த்தை- கோபிக்கு எதிராக திரும்பிய ஒட்டுமொத்த குடும்பம்.

photo

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலெட்சுமி தொடருக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்ல அவர்களது கணவர்களும் ரசிகர்களாக உள்ளனர்.  பரபரப்பான கதைகளம், துடிப்பான காட்சிகள், தத்ரூபமான நடிப்பு என இவை  அனைத்தாலும்  இந்த தொடர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் யாருமே எதிர்பார்க்காத விதமாக பாக்கியலெட்சுமி வீட்டில் பரபரப்பான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

photo

கோபி தனது அம்மாவின் பேச்சை கேட்டு பாக்கியாவிட்டிலேயே தங்குகிறார் அவருடனே ராதிகாவும் வந்து சேர்கிறார். இதனால் வீட்டில் சிறு சிறு உரசல் வருகிறது. நிலைமை இப்படி இருக்க கோபியின் தாய் ராதிவிடம் எப்போதும் கடிந்துகொள்கிறார். இதற்கு முடிவுகட்ட நினைக்கும் ராதிகா உடனே கோபியிடம் கூறி அம்மவிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்க சொல்கிறார்.

photo

கோபியும் அதை கேட்கிறார்,” பாக்கியா…. பாக்கியானு அவளை தலையில தூக்கி வச்சு ஆடுறீங்க. இவ எதோ கிளாசுக்கு போறேன்னு சொல்லிட்டு எங்கெங்கையோ போரா. ஸ்டைல்லா முடி வெட்டுற, விதவிதமா டிரெஸ் பண்ணிக்கிற.. யாருக்காக பண்ற, அந்த ஆள் கூட பழகதான” என பாக்கியாவை பற்றி தரக்குறைவாக பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு தாங்கிக்கொள்ள முடியாத எழில் கேபியிடம் சண்டை போட, யாரும் எதிர்பார்க்காத வகையில் செழியனும் பொங்கி எழுகிறார்.

வழக்கமாக தந்தைக்கு வக்காலத்து வாங்கும் செழியனா இது! என வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல புரொமோவை பார்க்கும் நமக்கும் திகைப்பாகதான் இருக்கிறது. தொடர்ந்து என்ன நடக்கவுள்ளது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story