செல்வராகவன் நடிப்பில் ‘பகாசூரன்’ படத்தின் 'ஆனந்தம் கூத்தாடும்' வீடியோ பாடல் வெளியீடு.

photo

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்  உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்ட இயக்குநரானார் இயக்குநர் மேகன் ஜி. இவர் தற்போது  ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் செல்வராகவனை கதாநாயகனாக வைத்து ‘பகாசூரன்’  திரைப்படத்தை இயக்குயுள்ளார். இவரோடு இணைந்து படத்தில் நட்டி நட்ராஜ், ராதாரவி, கே.ராஜன் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி இவர்களும் படத்தில் நடித்துள்ளனர்.

photo

 சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்த்ற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற நிலையில் தற்போது படத்தின் ஒருபாடலான ‘ஆனந்தம் கூத்தாடும்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.  இந்த பாடலை பிரபல இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

photo

 விவி பிரசன்னா குரலில் வெளியாகியுள்ள, இந்த பிரபல  பாடல் ஆசிரியர் சினேகன் எழுதியுள்ளார். அப்பா,  மகளின் அழகிய உறவை இந்த பாடல் உணர்த்துகிறது, இந்த வீடியோ பாடல். படம் இம்மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. பகாசூரன் திரைப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களை மைய்யமாக வைத்து இந்த படம் தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story