செல்வராகவனின் ‘பகாசூரன்’ திரைப்படம் பெற்ற சென்சார் சான்றிதழ்.

photo

ஆன்லைன் ஆப் மூலமால நடக்கும் பாலியல் தொழில் குறித்த கதையை மைய்யமாக கொண்டு தயாராகியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’ இந்த படத்தில் பிரபல இயக்குநரான செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருசன் இணைந்து நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய  படங்கள் மூலமாக  கவனம் ஈர்த்த மோகன்.ஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்  படம் தயாராகியுள்ளது. படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

photo

 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து முடிந்த நிலையில். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதன் எதிர்பார்பை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் சென்சார் சான்றிதழ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதாவது செல்வராகவின் நடிப்பில் தயாராகியுள்ள பகாசூரன் படத்திற்கு யு/ஏ சான்றிதல் கிடைத்துள்ளது. இது குறித்த போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதனுடன் படத்தின் வெளியீடு பிப்ரவரி என குறிப்பிட்டுள்ளனர். விரைவில் படத்தின் வெளியீடு தேதி  அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story