‘பகாசூரன்’ படத்தின் இயக்குநருக்கு பரிசு வழங்கிய தயாரிப்பாளர் – இத்தனை லட்சமா! வியந்த திரையுலகம்.

photo

இயக்குநர் செல்வராகவன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பகாசூரன்’. இந்த படத்தின் அவர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் தயாரான இந்த படத்தில் நட்டி நட்ராஜ், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். 

photo

‘பகாசூரன்’ திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  கலவையான விமர்சனத்தை பெற்றது. பொதுவாக சமூகம் சார்ந்த பிரச்சினைகளை கூறும் படங்களை இயக்கும்  மோகன்ஜி தற்போதும் இந்த திரைப்படத்தையும் அதேபோல எடுத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது தயாரிப்பாளர் கௌதம் படத்தின் இயக்குநரான மோகன் ஜிக்கு  ரூபாய் 5லட்சம் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

photo

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி  இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. செல்வராகவனின் பகாசூரன் திரைப்படம், தனுஷின் வாத்தி திரைப்படத்திற்கு போட்டியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.  

photo

photo

Share this story