‘பகாசூரன்’ யார் என்பதை திரையில் காண தயாராகுங்கள் -ரிலீஸ் தேதி வெளியீடு.

photo

திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்கள் மூலமாக கவனத்தை ஈர்த்த இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகியுள்ள  திரைப்படம் ‘பகாசூரன்’. இந்த படத்தில் பிரபல இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையில் உருவாகியுள்ள படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

photo

மோகன் ஜியின் ஜி எம் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற பின்னணியை கருவாக கொண்டுள்ளது. படத்தின் டீசர் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

photo

‘பகாசூரன்’ யார் என்பதை திரையில் காண தயாராகுங்கள் என்ற வசனத்தோடு படம் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரியப்படுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து படத்தை காண ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர்.

Share this story