'பகாசூரன்' படத்தை பாராட்டினாரா ? - அஜித் தரப்பு விளக்கம் !

bakasuran

'பகாசூரன்' படத்தை நடிகர் அஜித் பாராட்டியதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

  பிரபல இயக்குனராக செல்வராகவன் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. இந்த படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நட்டி நட்ராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

bakasuran

'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் தாராக்ஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, சசிலையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

bakasuran

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தை நடிகர் அஜித் பாராட்டியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள அஜித் தரப்பு, இந்த படத்திற்கு அஜித் எந்த பாராட்டும் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இதனால் சமூக வலைத்தளத்தில் வெளியான வதந்தி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Share this story