சிவராத்திரியை முன்னிட்டு ‘பகாசூரன்’ திரைப்படத்தின் ‘சிவ சிவாயம்’ வீடியோ பாடல் வெளியீடு.

ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் தயாரிப்பில் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ பகாசூரன்’. இந்த படத்தை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்ட இயக்குனரான இயக்குநர் மேகன் ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவனோடு இணைந்து நட்டி நட்ராஜ், ராதாரவி, கே.ராஜன் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி இவர்களும் படத்தில் நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற நிலையில் இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு ‘சிவ சிவாயம்‘ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
சாம் சி எஸ் குரலில் வெளியாகியுள்ள, இந்த பாடலை பாபநாசம் சிவன், திருவாசக இணைந்து எழுதியுள்ளனர். இந்த பாடல் காண்போரை பக்தி பரவசத்தில் திழைக்க வைக்கிறது.