"காமெடி கலந்த குடும்ப கதை"-புதிய படத்தில் நடிக்கும் பாக்கியராஜ் .

bakyaraj

நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் இந்தியாவில் சிறந்த திரைக்கதை மன்னன் என்று பெயர் வாங்கியவர் .இவரின் நடிப்பு மற்றும் இயக்கத்த்தில் பல்வேறு வெற்றி படங்கள் வந்துள்ளது .அதில் முந்தானை முடிச்சு ,தூறல் நின்னு போச்சு ,அந்த ஏழு நாட்கள் மற்றும் மவுன கீதங்கள் முக்கியமான படங்கள் .இவர் நகைச்சுவை கலந்த நடிப்பில் சிறந்தவர் .இவரின் நடிப்பில் ஒரு படம் இப்போது உருவாகி வருகிறது 

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் நடிப்பில் உருவாகும் படம் ‘ஆனந்த வாழ்க்கை’. ஊரில் உள்ளவர்களின் சிக்கலான பிரச்னைகளை எல்லாம் எளிதாக தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் உள்ள ராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாக்யராஜ். தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியாமல் தவிக்கிறார். இதையொட்டி நடக்கும் சம்பவங்களே கதை. மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘ஆனந்த வாழ்க்கை’. என்ற இப்படத்தை ஆர்.சுப்ரமணிய பாரதி எழுதி இயக்கி உள்ளார். சத்யா.சி . இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு கே.கோகுல், எடிட்டிங் சிவராஜ். ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம் தயாரித்திருக்கிறது. தயாரிப்பு நிர்வாகத்தை ஆழியாறு அருள்நிதி. சிஇஓ முருகானந்தம் கவனிக்கிறார்.விரைவில் வெளியாகும் இப்படம் நாம் வெற்றி பெற வாழ்த்துவோம் 

Share this story