96 பட ஜோடியுடன் பாக்கியராஜ் நடித்துள்ள படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

bakyaraj

ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ என்ற படத்தின் மூலம் தமிழ் படவுலகில் அறிமுகமான ஆதித்யா பாஸ்கர், தற்போது கதையின் நாயகனாக நடித் துள்ள படம், ‘லவ் அண்ட் வார்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஜீவா, ஆர்யா ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். ராஜ்குமார் ரங்கசாமி எழுதி இயக்கியுள்ள இதில் ஆதித்யா பாஸ்கர், ‘96’ கவுரி கிஷன், கே.பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரஸ்வதி மேனன், ஜீவா ரவி, டிஎஸ்ஆர், நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைத்துள்ளார். பரத் விக்ரமன் எடிட்டிங் செய்ய, ஆர்ஜின் ஸ்டுடியோஸ் சார்பில் கண்ணா பாஸ்கர் தயாரித்து இருக்கிறார். படம் குறித்து ராஜ்குமார் ரங்கசாமி கூறுகையில், ‘ஒரு தேநீர் பருகும் கால அவகாசத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டிய விஷயத்தை ஈகோவினாலும், கோபத்தினாலும் அந்த பிரச்னையை ஊதி பெரிதாக்கி உறவுகளை இழந்துவிட கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும், அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையிலும் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது’ என்றார்.

Share this story