"பாலா எனக்கு ஒரு ஹீரோ" : இயக்குனர் மணிரத்னம் ஓபன் டாக் !
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநரான பாலா, திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். இதனை கொண்டாடும் விழாவையும், வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் ஒன்றாக நடத்தினார் அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. விழா நேற்றைய தினம் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் சிவகுமார், சூர்யா, விக்ரமன், மிஷ்கின் சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன், மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிவகுமார், இயக்குநர் பாலாவுக்கு தங்க செயின் ஒன்றை பரிசளித்தார்.
இந்த நிகழ்வில் மணிரத்னம் பேசும் பொழுது, எல்லோருக்கும் பாலா மிகச் சிறந்த இயக்குநர். ஆனால், எனக்கு அவர் ஒரு ஹீரோ. சேது திரைப்படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு நான் மிஸ் செய்து விட்டேன். நந்தா திரைப்படத்தை நான் தியேட்டரில் பார்த்தேன். எல்லா கலையிலும் அவ்வளவு நேர்த்தி இருந்தது.
அவர் அன்று எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படித்தான் இருக்கிறார். அவர் ஹீரோதான். பாலா சாரிடம் நீங்கள் மிகவும் மெதுவாக படம் இயக்குகிறீர்கள் என்று சொல்கிறேன். நிறைய படங்கள் தமிழ் சினிமாவை கீழ்நோக்கி எடுத்துக் கொண்டு செல்கின்றன. நீங்கள் மேலே வர வேண்டும் பாலா’ என்று பேசினார்.