திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்த பாலகிருஷ்ணா...!

bala kirishna


தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. தனது 14 வயதில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய பாலகிருஷ்ணா,தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார்.
இவர் படங்களுக்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. 1974 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் பாலகிருஷ்ணா, திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்துள்ளார். இதுவரை 109 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் மொத்தம் 129 கதாநாயகிகள் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகி உள்ளனர்.இதுவரை இவர் நடித்த படங்கள் ரூ. 10 லட்சம் தொடங்கி அதிகபட்சம் ரூ. 250 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளன. இவரது புது படங்கள் வெளியீட்டின் போது இவரது கட்அவுட் குறைந்த பட்சம் 10 அடியில் துவங்கி அதிகபட்சம் 108 அடி வரை வைக்கப்பட்டுள்ளன.

Bala krishna
பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படங்கள் அதிகபட்சம் 1000 நாட்கள் வரை திரையில் ஓடியுள்ளன. திரையுலகில் பலவிதமான கதையம்சம் கொண்ட படங்களில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். சினிமா மட்டுமின்றி தொலைகாட்சி நிகழ்ச்சி, பொது சேவை மற்றும் அரசியல் என பலதுறைகளில் பாலகிருஷ்ணா கவனம் செலுத்தி வருகிறார். ஆந்திர பிரதேச அரசியலில் பாலகிருஷ்ணாவின் தந்தை என்.டி. ராமாராவ்-க்கு அடுத்தப்படியாக தொடர்ச்சியாக மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா.

Share this story