பாலா ஆக்ஷன் சொல்லி முதல் காட்சியை துவக்கி வைத்த படம் -இயக்குனர் யார் தெரியுமா ?
பாலா இயக்கிய ‘நந்தா’ மற்றும் அமீர் இயக்கிய ‘மௌனம் பேசியதே’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிக்கும் புதிய படத்தை அமீரின் உதவி இயக்குனர் இராம்.நா இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இப்படத்தின் தொடக்க விழா நிகழ்வில், இயக்குனர் சேரன் கிளாப்-இன் சொல்ல, சசிகுமார் கேமரா ஆன் செய்து, அமீர் கிளாப் போர்ட் அடித்து, பாலா ஆக்ஷன் சொல்லி முதல் காட்சியை இயக்கினார். எஸ்.ஏ.சந்திரசேகர், சிவக்குமார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பன் உள்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நெகிழ்ச்சியான கதைக்களமும், ஊக்கமளிக்கும் திரைக்கதையும் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு, இளையராஜா இசையமைக்கிறார். வாஞ்சி முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, பரதன் வசனம் எழுத, பாலுமகேந்திரா கலை இயக்கத்தில், பூபதி வேதகிரி எடிட்டிங் பணிகளை கவனிக்கின்றனர்.

