இசையமைப்பாளர் தமனுக்கு விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கிய பாலையா!

thaman

நடிகர் பாலகிருஷ்ணா இசையமைப்பாளர் தமனுக்கு விலையுயர்ந்த போர்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார்.

தெலுங்கில் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கும் இசையமைப்பாளர் தமன், கடந்த சில ஆண்டுகளில் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா) நடிப்பில் வெளியான பல படங்களுக்கு இசையமைத்து, அந்த படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அகண்டா, வீரசிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகூ மகாராஜ், போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார்.thaman

இந்த படங்களில் தமனின்  BGM , பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.இதன் காரணமாக, நந்தமூரி ரசிகர்கள் அவரை ‘நந்தமூரி தமன்’ எனக் கொண்டாட தொடங்கினர். இந்த பெயரை பாலகிருஷ்ணா மற்றும் அவருடைய மனைவியும் பொது நிகழ்ச்சிகளில் அழைத்திருப்பது சிறப்பாக பேசப்பட்டது.

இதனையடுத்து, நமக்கு நல்ல பாடல்களை கொடுத்து நம்மளுடைய படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்த இசையமைப்பாளர் தமனுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதால் பாலகிருஷ்ணா, அவருக்கு மதிப்புமிக்க Porsche கார் ஒன்றை பரிசாக வழங்கி அவரை கௌரவித்துள்ளார். அடுத்ததாக தமன் அவருடைய அகண்டா 2 படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.thaman

எனவே, இப்போது பரிசு கொடுத்தால் ஒரு சந்தோசமாக அவருக்கு இருக்கும் என்பதால் பாலகிருஷ்ணா பரிசு கொடுத்திருக்கிறார்.  இந்தியாவில் Porsche கார்களின் விலைகள் பொதுவாக ரூ.1.2 கோடி முதல் ரூ.3.2 கோடி வரை இருக்கும். இப்படி விலை உயர்ந்த ஒரு காரை தமனுக்கு பாலகிருஷ்ணா வழங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Share this story