இனிமேல் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் - பாலாஜி முருகதாஸ்..!

1

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பாலாஜி முருகதாஸ்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் பாலாஜி முருகதாஸ் வீட்டுக்குள் சண்டை போடுவதும், சர்ச்சை கருத்துக்களை கூறுவதும் என அதிகம் விமர்சிக்கப்பட்டவர். இருப்பினும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.சீசன் 4 பிக் பாஸில் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்தார். பலரும் இவர் முதல் பரிசை தட்டிச்செல்வார் என எதிர்பார்த்தனர். இருப்பினும் 4வது சீசனில் முதல் இடத்தை தவறவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார் பாலாஜி.அதன்பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் பாலாஜி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். இதிலும் தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி டைட்டில் வின்னர் ஆனார், பாலாஜி முருகதாஸ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பு மூலம் ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அதன்படி வா வரலாம் வா, சபாநாயகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து பட வாய்ப்புகள், ஆல்பம் பாடல்கள் என பிஸியாக இருந்து வருகிறார் பாலாஜி முருகதாஸ்.கடந்த ஆண்டு ஹீரோவாக வா வரலாம் வா படத்தில் நடித்த பாலாஜி முருகதாஸுக்கு அந்த படம் ஓடவே இல்லாத நிலையில், அப்செட் ஆனார். ஆனால், அதன் பின்னர் அருண் விஜய்யுடன் இணைந்து ரெட்ட தல படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அருண் விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில் ’ஃபயர்’ என்ற திரைப்படத்தில் நடித்தேன். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்தது. ஆனால் இந்த படத்தில் நான் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளம் வழங்கவில்லை. எனவே நான் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இனிமேல் சினிமாவில் நடிக்கவே மாட்டேன். நான் இதை விட்டு விட்டு வேற வேலையை பார்க்கப் போகிறேன் என்றும் அந்த தயாரிப்பாளரையும் திட்டி ட்வீட் போட்டுள்ளார்.
 

Share this story