பாலகிருஷ்ணாவின் 'தாகு மஹாராஜ்' பட டிரெய்லர் ரிலீஸ்
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்பொழுது தாகு மஹாராஜ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பாபி கொல்லி இயக்கியுள்ளார். இப்படம் ஒரு ஆக்ஷன் நிறைந்த கதைக்களத்துடன் அமைந்துள்ளது. நடிகர் பாபி தியோல் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. ஷ்ரதா ஸ்ரீநாத், பிரக்யா ஜெய்ஸ்வாஅல், ஊர்வசி ராடலா, சந்தினி சௌத்ரி மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சிதாரா எண்டர்டெயின்மண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொண்டுள்ளார். படத்தின் படத்தொகுப்பை நிரஞ்சன் செய்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி சிறிது நேரத்திலே 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.