என்டிஆர் 100வது பிறந்தநாள் : விஜயவாடா பறந்த ரஜினிகாந்த்.

photo

என்டிஆர் நுற்றாண்டு வழாவில் கலந்து கொள்வதற்காக  விஜயவாடா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பாலைய்யா வரவேற்ற காட்ட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

நந்தமுரி பாலகிருஷ்ணாவின் தந்தையும் பழம்பெரும் நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமுரி தாரக ராமராவ் (என்டிஆர்) நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. விஜயவாடாவில் நடைபெறும் விழாவை தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியை பாலகிருஷ்ணா தலைமையேற்று நடத்துகிறார். இதில்கலந்துகொள்ள விமான நிலையம் வந்து இறங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பாலைய்யா நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

நந்தமுரி பாலகிருஷ்ணா கடைசியாக வீர சிம்ம ரெட்டி படத்தில் நடித்தார். மேலும்  அவர் தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் போயபதி ஸ்ரீனுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story