ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் நடிக்கிறாரா பாலைய்யா...?

jailer 2

‘ஜெயிலர் 2’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க நந்தமுரி பாலா கிருஷ்ணா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இதுவரை 30% காட்சிகளை முடித்துவிட்டது படக்குழு. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா என முதல் பாகத்தில் உள்ள நடிகர்கள் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள்.  இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் ஃபாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

jailer 2

ஜினி – ஃபகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. முன்னதாக இருவரும் ‘வேட்டையன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்க  நந்தமுரி பாலா கிருஷ்ணா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Share this story