பாலையாவின் 'அகண்டா 2-தாண்டவம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

balaiya

போயபதி சீனு இயக்கி வரும் அகண்டா 2- தாண்டவம் படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.aganda

இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை கடந்த அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்றது.முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. அடுத்தக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக உள்ளது.

Share this story