‘ஜெயிலர்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் –சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல்.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த மற்றும் நெல்சன் கூட்டணியில் தயாரான ‘ஜெயிலர்’ தியேட்டரில் சக்கைபோடு போட்டுவரும் நிலையில் படத்தில் அதீத வன்முறை காட்சிகள் இருப்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

photo

‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட ஜெயிலர் படத்தில் அடிதடி, கத்தி, சண்டை, துப்பாக்கி சூடு, ரத்தம் என வன்முறை நிரம்பி வழிவதாலும், தலைகீழாக தொங்கவிட்டு சுத்தியலால் அடித்து கொல்வது, தலையை துண்டாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெறுவதாலும் இந்த படத்திற்கு அளிக்கப்பட்ட சென்சார் சான்றிதழை ரத்துசெய்துவிட்டு ஏ சான்றிதழ் வழங்கவேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அமெரிக்கா, பிரிட்டன் பேன்ற நாடுகளில் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதை மேற்கோள் காட்டி படத்தின் மீது மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story