ஊட்டி பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு நடத்த 3 மாதங்கள் தடை...!

ooty

ஊட்டி பூங்காவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு ஏராளமான படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தோட்டக்கலை பூங்காக்களில் கட்டணம் அடிப்படையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு சென்னையில் உள்ள தோட்டக்கலைத்துறை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்காக்களில் ஒரு நாள் படப்பிடிப்பு கட்டணமாக 50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.ooty

ஆனாலும் ஒவ்வொரு ஆண்டு கோடை விடுமுறையின் போது மக்கள் அதிகமாக இந்த பூங்காக்களுக்கு வருவதால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அந்த காலகட்டத்தில் படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்படும்.

அந்த வகையில் இன்று (ஏப் 1)) முதல் ஜூன் 30ம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்பட நீலகிரியில் உள்ள 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Share this story

News Hub