நீண்ட இடைவெளிக்கு பின் பரத் நடிக்கும் படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

barath

ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் என்.யோகேஸ்வரன் மற்றும் விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் தயாரித்துள்ள படம், ‘காளிதாஸ் 2’. இதை பரத் நடித்த ‘காளிதாஸ்’ என்ற படத்தை எழுதி இயக்கிய செந்தில் இயக்கியுள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். பரத், அஜய் கார்த்திக், அபர்ணதி, பவானி, ‘பூவே உனக்காக’ சங்கீதா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

அப்போது பரத் உருக்கமாக பேசியதாவது: சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் ஏற்ற, இறக்கம் இருக்கும். வெற்றிப் படம் கொடுத்தால், தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தோல்விப் படம் கொடுத்தால், அதை வைத்து மார்க்கெட் இல்லை என்பார்கள். நான் சினிமாவை விட்டு எங்கேயும் ஓடவில்லை. இங்கேயே இருக்க வேண்டும் என்பதால்தான், கடந்த 23 வருடங்களாக அடித்துப் பிடித்து ஏறி வந்து கொண்டிருக்கிறேன். வியாபாரம் என்று வரும்போது, எனது கடைசி படத்தை வைத்தே முடிவு செய்கிறார்கள்.

Share this story