சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்...?

basil joseph

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பசில் ஜோசப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மலையாளத்தில் வெளியான கோதா, மின்னல் முரளி உட்பட சில படங்களை இயக்கிய பசில் ஜோசப், நடித்தும் வருகிறார். ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தில் இவர் நடிப்புப் பேசப்பட்டது. இவர் அடுத்து இயக்கும் படத்தில் மோகன்லாலும் மம்மூட்டியும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.basil joseph

இந்நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து  இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி வரும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், அங்கு நடைபெறும் பராசத்தி படப்பிடிப்பில் பசில் ஜோசப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


 

Share this story